சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி செயற்குழு கூட்டத்தோடு இணைந்து ஒரு ரகசிய கட்சிக் கூட்டம் தவெக சார்பில் இன்று நடைபெற்று வருகின்றது. இதற்காக காலையிலேயே தனது வீட்டிலிருந்து கிளம்பிய தலைவர் விஜய் பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தார். இவர் இந்த கூட்டத்தின் மூலம் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி நம்முடைய பயணம் எப்படி இருக்க வேண்டும் என்கிற யூகத்தை செயற்குழு கூட்டத்துடன் கலந்துரையாட உள்ளார்.
மேலும் இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்தும் இவர் பேசப் போவதாக தகவல் வெளியாகின்றன. ஏற்கனவே பாஜக தொடர்ந்து தவெக கட்சி கூட்டணியில் இணைவதை வலியுறுத்தி வருகிறது. திமுகவும் சமீபத்தில் விஜய் கூட்டணியில் இணைந்தால் திமுகவின் வளர்ச்சி அபரிவிதமானது என்று தகவல் வெளியாகி வந்திருந்தன. இந்நிலையில் இன்று கூடும் தவெக செயற்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளி வந்துள்ளன. மேலும் 15 தீர்மானங்களுக்கு மேலாக நிறைவேற்றப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் செயலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து உள்ளனர். இது முக்கியமாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எந்தெந்த இடங்களில் மக்கள் சந்திப்பில் நடக்க வேண்டும், எத்தனை வார்டு பிரிக்க வேண்டும், எந்தெந்த வார்டுக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் வேண்டும் என்பது அடங்கிய தகவல் பகிர்வாக இந்தக் கூட்டம் இருக்கும். மேலும் மாவட்ட வாரியாக எத்தனை நாட்கள் ஓட்டு கேட்டு செல்ல வேண்டும் என்கின்ற முடிவுகளும், தேர்தல் கள பணிகள் குறித்தும், செயற்பாட்டுக் குழுவுக்கு அறிவித்தும் வகையில் இந்த கூட்டம் நடந்து வருகிறது.





