இஸ்லாமாபாத்: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தொடர்ந்து நிறுத்தி வைத்தால் முதலில் பாகிஸ்தான் பாலைவனமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிந்து நதி நிறுத்தி வைப்பது தொடர்ந்தால் தண்ணீர் பஞ்சத்தால் பாகிஸ்தான் இன்னும் மோசமான நிலையை சந்திக்கும்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்து நடவடிக்கையை கையில் எடுத்து பின் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் சிந்து நதியின் நீரை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா கூறியுள்ளது. இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டு வருகிறது.
இந்தியாவிடம் சிந்து நதிநீர் ஒப்பந்தம் செயல்படுத்த வேண்டும் என இந்தியாவை வலியுறுத்தி வருகிறது. மேலும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கோரிக்கையை விடுத்துள்ளது. தாக்குதலுக்கு பிறகு மே மாதம் சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தியது.
சர்வதேச நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒப்பந்த செயல்பாட்டை இருப்பதாக பாகிஸ்தான் கூறி வந்தது. சர்வதேச நீதிமன்ற விசாரணை முடிந்து ஜூன் கடைசி வாரம் தீர்ப்பளித்திருந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்தியா அங்கீகரிக்கவில்லை. கடந்த வாரத்தில் தீர்ப்பை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது இந்தியா.
நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் வெளியிட்டிருந்து செய்தியில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் செல்லுபடி ஆகும் என செயல்பாட்டில் உள்ளது என சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளது என்றும், இந்தியா ஒரு தலை பட்சமாக நடவடிக்கை எடுக்க உரிமையே இல்லை என பாகிஸ்தான் நிலைப்பாட்டை கூறியுள்ளது.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டும் என இந்தியாவை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என கூறப்பட்டிருக்கிறது. சிந்துநதி நீரை நம்பியே பாகிஸ்தான் உள்ளது. தண்ணீர் பஞ்சம் தொடர்ந்தால் பாலைவனமாக மாறி விடும் என்று பாகிஸ்தான் அச்சத்தில் உள்ளது.