தனியார் மற்றும் அரசு வங்கிகளில் பர்சனல் லோன் போன்ற கடன்களை வரும் பொழுது பலரும் தங்களுடைய வட்டி விகிதங்கள் மற்றும் சில முக்கிய தகவல்களை கவனிப்பது கிடையாது. காரணம் தங்களுடைய அவசர தேவைகளுக்கு பணம் கிடைத்தால் போதும் என்று எண்ணம் இருப்பது மட்டுமே.
பொதுவாக பல வங்கிகள் தங்களுடைய வங்கிகளின் அனைத்து கட்டணங்களையும் வெளிப்படையாக தெரிவிக்காது. ஒரு சில கட்டணங்கள் கடன் பெறக்கூடிய பயனாளிகளுக்கு தெரியும் வகையிலும் ஒரு சில கட்டணங்கள் மறைமுக கட்டணங்களாக வசூலிக்கப்படுவது வங்கிகளை பொறுத்தவரை வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
கடன் பெறும்பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய 5 வழிமுறைகள் :-
✓ Processing charge :-
கடன் வழங்குவதற்கான செயல்முறைகளை பின்பற்றுவதற்காக வங்கிகளில் இதுபோன்ற பிராசசிங் சார்ஜ் போடப்படுகிறது. மேலும் இந்த பிராசசிங் சார்ஜ் ஆனது நீங்கள் வாங்கக்கூடிய கடன் தொகையிலிருந்து 1% முதல் 3% வரை வங்கிகளை பொறுத்து வசூலிக்கப்படுகிறது.
✓கடன்களை பெற்ற பின்பு இஎம்ஐ இல் திருப்பி செலுத்தும் பொழுது காலதாமதங்கள் ஏற்பட்டால் அவற்றிற்கான அபராதமாக 2% முதல் 4% வரை வசூலிக்கப்படுகிறது.
✓ கடனை ரத்து செய்ய கட்டணம் :-
கடன் வேண்டி வங்கிகளில் விண்ணப்பித்து விட்டு கடன் கைக்கு வரும் நேரத்தில் கடன் தொகை வேண்டாம் என மறுக்கக் கூடியவர்களிடம் இதுபோன்ற கடன் மறுப்பு தொகை பெறப்படுகிறது. இவ்வாறு பெறப்படக்கூடிய தொகையானது 1000 ரூபாய் முதல் 3000 ரூபாயாக வங்கிகளை பொறுத்து மாறுபடுகிறது.
✓ இ எம் ஐ பவுன்ஸ் தொகை:-
வங்கி கணக்குகளில் உங்களுடைய கடன் தொகைகள் சரியான நேரத்திற்குள் போடப்படாமல் இருப்பதால் இது போன்ற இஎம்ஐ பவுன்ஸ் ஏற்படுகிறது. இதற்கு வங்கிகளில் அபராத கட்டணமாக 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
✓ டாக்குமெண்ட்ஸ் சார்ஜஸ் :-
இது அனைத்து வங்கிகளிலும் பெறக்கூடிய அனைத்து வகையான லோன்களுக்கும் பரப்படக்கூடிய கட்டணமாக அமைகிறது. கடன் பெறக்கூடியவர்களின் விவரங்களை உள்ளீடு செய்வதற்கும் அவர்களுடைய ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கும் இந்த டாக்குமெண்ட் சார்ஜர்ஸ் ஆனது 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.