சமீபத்தில் திமுக வுடன் இணைந்த விசிக கட்சி தலைவர் திருமாவளவன் தங்கள் கட்சி சார்பாக போட்டியிட இரு டிஜிட் அதாவது 10க்கு மேற்பட்ட தொகுதிகள் வேண்டும் என்று வலியுறுத்தி வந்திருந்தார். அதற்கு திமுக கட்சி மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் இரு கட்சியும் கூட்டணியில் பிளவு வரும் என்று பிற கட்சிகள் எதிர்பார்த்து இருந்தனர். மேலும் விசிகவின் கூட்டணிக்காக அதிமுகவும் போராடி வருகின்றது. தவெகவும் விசிகவை அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது கட்சி உறுப்பினர்களோடு பேசி பின்னர் செய்தியாளர்களிடம் முடிவு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியது பின்வருமாறு, கடந்த கட்சி தேர்தலின் போது எங்கள் கட்சி சார்பாக ஐந்து இடங்கள் திமுக கூட்டணியுடன் இணைந்து செயல்பட்டு இருந்தோம். இந்நிலையில் இந்த ஆண்டு 10 க்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட வேண்டுமென்று கட்சி முக்கிய உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அது தொடர்பாக கூட்டணி கட்சி திமுகவுடன் கலந்து உரையாடி உள்ளோம். எங்களுக்கு பத்து தொகுதிகள் கிடைக்கவில்லை என்றாலும் சரி நாங்கள் திமுகவுடன் கூட்டணியில் தொடர்வோம். மதவாத சக்திகளை எதிர்க்கும் எங்கள் கொள்கையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஏற்கனவே கட்சி உறுப்பினர்களோடு கலந்துரையாடியதாகவும் தெரிவித்திருந்தார். கூட்டணி குறித்தும் எந்த ஒரு மாற்றமும் இல்லை. கட்சி கொள்கைகள் குறித்தும் மாறப்போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.