கிரிக்கெட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளுக்கிடையான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விலாசி சாதனை படைத்தார் கில்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டியில் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வரும் நிலையில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தொடங்கிய இரண்டாவது போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கியது கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இணை.
ஆனால் கே.எல் ராகுல் இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார் இதனை தொடர்ந்து களமிறங்கிய கருணாயர் 31 ரன்கள் ஆட்டம் இழக்க அடுத்து களமிறங்கிய கேப்டன் கில் நிதானமாக அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் 199 பந்துகளில் சதம் பூர்த்தி செய்தார் தொடர்ந்து அபாரமான பேட்டிகளை வெளிப்படுத்தி 311 பந்துகளில் இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார்.
தொடர்ந்து அசாத்திய பேட்டிங்கால் 348 பந்துகளில் 250 ரன்கள் சேர்த்தார். இந்த போட்டியில் முச்சதத்தை பதிவு செய்ய இருந்த நிலையில் 269 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். இதன் மூலம் இதுவரை நடந்த 93 வருட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கில்.