பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் மிக முக்கிய நிர்வாகியான எம்எல்ஏ அருளை நீக்குமாறு தொடர்ந்து அன்புமணி கொடைச்சல் கொடுத்துக் கொண்டே வருகிறார். மேலும் அவர் வகிக்கும் கொறடா பதவிக்கு மற்றொரு ஆளையும் தேர்ந்தெடுத்து சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் எம்எல்ஏ அருளை நீக்குமாறு தொடர்ந்து அன்பு மணி கூறிய நிலையில், ராமதாஸ் அன்புமணிக்கு இந்த அதிகாரம் கிடையாது என்று தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று அன்புமணி ஆதரவாள எம்எல்ஏக்கள் இணைந்து அருளை நீக்குமாறு சட்டசபை செயலரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் அன்புமணி அளித்த கடிதத்தை கட்சி எம்எல்ஏக்கள் வெங்கடேசன், சிவக்குமார் மற்றும் சதாசிவம் இணைந்து சபாநாயகரிடம் வழங்கியுள்ளனர். அதே சமயத்தில் அருள் கொறடா பகுதியில் தொடர்வார் என்ற ராமதாசின் பரிந்துரை கடிதத்தை அருள் சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளார். எதிர்ப்பு கடிதம் அளித்ததோடு மட்டுமல்லாமல் அடுத்த கொறடாவாக மயிலம் சிவக்குமாரை எங்கள் கட்சியில் பதவி வகிக்குமாறு கேட்டு அடுத்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இதனை பரிசீலித்து சபாநாயகர் என்ன முடிவு சொல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு கட்சி மத்தியில் உள்ளது.