Cricket : இந்திய மற்றும் பாகிஸ்தான் அணி இடையே நடைபெற்று முடிந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியதால் இந்தியா மீது நகைச்சுவையான ஒரு வினோத குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது பாகிஸ்தான் ஊடகம்.
2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடத்தும் பாகிஸ்தான் அணி நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. இந்தத் தொடரில் அரை அருவிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இந்த தோல்விக்கு பின் பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் அணி வீரர்களின் மீது உள்ள தவறை சுட்டிக்காட்டி அதை திருத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டியில் இந்திய அணி பேட்டிங் பில்டிங் பௌலிங் என அனைத்து விதத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியுடன் எப்படி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோ, அதைப்போலவே அன்றும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியடைந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் ஊடகம் வினோதமான ஒரு குற்றச்சாட்டினை இந்தியா மீது முன் வைத்துள்ளது. அந்தக் குற்றச்சாட்டு என்னவென்றால் இந்திய கிரிக்கெட் வாரியம் துபாயில் பாகிஸ்தான் வீரர்களுக்கு சூனியம் வைத்ததாக கூறியுள்ளது, குறிப்பாக ஒரு வீரருக்கு இரண்டு மந்திரவாதிகள் என மொத்தம் 22 மந்திரவாதிகள் சூனியம் வைத்ததாக கூறியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. பாகிஸ்தானில் மந்திரவாதிகள் நுழைய முடியாது என்றுதான் போட்டியை துபாயில் நடத்தி உள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம் என கூறியுள்ளது அந்த பாகிஸ்தான் ஊடகம்.





