தவெக செயற்குழுக் கூட்டம் காலையிலிருந்து பனைவூரில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது. அதில் தவெகவின் செயற்குழு கூட்டங்கள் ஒருங்கிணைந்து விஜயை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் அவரையே கூட்டணி குறித்து முடிவு எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். இக்கூட்டத்தில் தலைவர் விஜய் பேசும் போது, பிளவுவாத கட்சிகள் மற்றும் கொள்ளை எதிரிகள் உடன் தவெக ஒருபோதும் கூட்டணி வைத்துக் கொள்ளாது. மக்களை பிளவு படுத்தி குளிர் காய பாஜ நினைக்கிறது. ஆனால் அதன் செயல்பாடு ஒருபோதும் தமிழ்நாட்டில் எடுபடாது.
தமிழகம் அன்பும் சகோதரத்தவமும் நிறைந்த ஒரு மாநிலம். இந்த மண்ணில் மதிப்பிற்குரிய தலைவர்களை வைத்து பாஜக ஆட்சி செய்ய நினைக்கிறது. அரசியல் ஆதாயத்திற்காக சுயநலத்திற்காக தவெக கூட்டணிக்கு ஒத்துழைப்பதற்கு திமுகவோ அதிமுகவோ கிடையாது. ஒருவேளை கூட்டணி ஏற்பட்டாலும் அது தமிழக வெற்றி கழகத்தின் கீழ் தான் அமையும். எப்பொழுதும் திமுக மற்றும் பாஜகவிற்கு எதிராகவே இந்த கூட்டணி செயல்படும். இதுவே இறுதி மற்றும் உறுதியான தீர்மானம் என்று அவர் கூட்டணி குறித்து தெரிவித்திருந்தார். ஜூலை இரண்டாவது வாரம் முதல் உறுப்பினர்கள் சேர்க்கையும், செப்டம்பர் முதல் மக்கள் சந்திப்பும், கச்சத்தீவு குத்தகைக்கு கேட்க தீர்மானம் ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநில சுயாட்சியை நிலை குலைத்துள்ள தமிழக உள்துறை அமைச்சருக்கு கண்டனம், மற்றும் திமுக அரசை வன்மையாக எதிர்த்தும் ஸ்டாலின் பரந்துறை இன்னும் ஏன் சந்திக்க செல்லாமல் இருக்கிறார் என்பது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளார்.