கிரிக்கெட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உம்ராவுக்கு பதிலாக ஆகாஷ் தீப் களம் இறங்கியது விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்கு பந்துவீச்சின் மூலமாக பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி இடையிலான டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டியில் இந்திய அணியின் மிகவும் மோசமான பந்துவீச்சின் காரணமாக தோல்வியை தழுவியது இதனால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் முதல் போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்தது.
முதல் போட்டியில் மிகவும் மோசமான பந்துவீச்சு காரணமாக இங்கிலாந்து அணி வெற்றியை பதிவு செய்ய முக்கிய காரணமாக இருந்தது. மேலும் பும்ரா தவிர எந்த பந்துவீச்சாளர்களும் சரியான பந்துவீச்சினை வெளிப்படுத்தவில்லை. அவரும் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் திணறினார். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளதாக கூறி அவர் பிளேயிங் லெவனில் விளையாட வில்லை.
அவருக்கு பதிலாக ஹர்ஷிப் சிங் களமிறங்க வேண்டும் என ரசிகர்கள் கூறிவந்த நிலையில் திடீரென ஆகாஷ் டிப் அணியில் நுழைந்தார் இது ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் இரண்டாவது போட்டியில் முதலென்ஸில் பந்துவீசி நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அபார பந்துவீச்சு வெளிப்படுத்தி உள்ளார் இதன் மூலம் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.