ரயில்வே துறையில் வேலை தேடுபவரா நீங்கள்! விண்ணப்ப அவகாசத்தை RRB கூடுதலாக மார்ச் ஒன்றாம் தேதி வரை நீடித்துள்ளது. கிட்டத்தட்ட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உள்ளன. ரயில்வே துறையில் குரூப் டி தேர்வின் மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன. இது மத்திய அரசின் கீழ் செயல்படுவதால் மூன்று கட்டமாக தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
பொறியியல், மெக்கானிக்கல், S&T, எலக்ட்ரிக்கல் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளும் இந்தத் தேர்வின் கீழ் வரும். இந்தத் தேர்வின் மூலம் கிட்டத்தட்ட 32,438 பணியிடங்களுக்கு வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. இதற்கு கல்வி தகுதியானது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NCVT யிடம் தேசிய பயிற்சி சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
வருகின்ற ஜூலை 1 படி விண்ணப்பதாரர் 18 வயது முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்ப கட்டணமாக ஓ பி சி பிரிவினருக்கு ரூபாய் 500 ம், எஸ்சி எஸ்டி மற்றும் பெண்கள், திருநங்கைகளுக்கு ரூபாய் 250ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓ பி சி பிரிவு ஆண்களின் கட்டணம் கணினி தேர்வின் போது 400 ரூபாய் திரும்பி அனுப்பப்படும். 250 ரூபாய் பிரிவினருக்கு அனைத்து ரூபாயும் திருப்பி அனுப்பப்படும். முதலில் கணினி அடிப்படையில் ஆன தேர்வு (CBT-1), அடுத்தது உடல் திறன் தேர்வு, அடுத்தது ஆவணம் சரிபார்ப்பு, பின் மருத்துவ பரிசோதனை என்ற அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும். https://www.rrbcdg.gov.in/ என்ற RRBயின் அபிசியல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.