தமிழ் திரை உலகில் புதியதாக ஒரு கிரிக்கெட் வீரர் களமிறங்க உள்ளார். அவர்தான் பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. இவர் பிரபல இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுள் ஒருவர். ஸ்பின் பந்துவீச்சும் இவருக்கு கைவந்த கலை. சென்னை சூப்பர் கிங்ஸ் டீமிற்காக பலமுறை விளையாடி உள்ளார். கிரிக்கெட் உலக கோப்பை, ஐசிசி சாம்பியன் டிராபி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பையில் சதம் அடித்து இருந்த முதல் இந்திய வீரர். இதற்கு தமிழ்நாட்டில் எக்கச்சக்க ஃபேன்ஸ் கிரிக்கெட் அடிப்படையில் ஏற்கனவே உள்ளது.
தற்சமயம் தமிழ் திரைப்படத்தின் பெரும்புள்ளிகளான விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் வேறு பீல்டுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் சினிமா துறையை விட்டே வெளிவந்துவிட்டார். இந்த நேரத்தில் தமிழ் திரையுலகில் களம் இறங்குகிறார் சின்ன தலை என்று தமிழ் கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா. இதனால் தமிழ் திரையுலகமும் அவரின் கிரிக்கெட் ரசிகர்கள் கூட்டமும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளது. மேலும் இவரது படங்களுக்கு குறித்த அடுத்தடுத்த அப்டேட்களுக்கு கழுகு போல் காத்திருக்கின்றனர் ரசிகர் கூட்டங்கள். மேலும் இது குறித்து அவர் மிக மகிழ்வாக, சென்னையில் பலமுறை விளையாடி உள்ளேன். மெரினா கடற்கரையில் விற்கப்படும் ரசம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுபோக அங்கு தான் எனக்கு விசில் போடு என்கிற டீம் உள்ளது. கூடிய விரைவில் சின்ன தலையின் ஆட்டம் தமிழ் சினிமாவில் தொடங்க உள்ளது என்று அவர் பதிவிட்டுள்ளார்.