வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பிரம்மாண்ட சட்டமான “பிக் பியூட்டிஃபுல் பில்” என்று திட்டத்தை கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்தினார். செலவு மற்றும் வரி சம்பந்தப்பட்ட பெரிய மசோதாவாக பிக் பியூட்டிஃபுல் பில் இருக்கும் என கையெழுத்திட்டு உள்ளார். தனது இரண்டாவது ஆட்சி காலத்தில் அதிபர் நினைத்த பல முக்கியமான செயல்களை செயல்முறை படுத்தியுள்ளார். அதன்படி ஜூலை நான்காம் தேதி அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பிக் பியூட்டிஃபுல் பில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இந்த மசோதாவுக்கு “ஒன் பிக் பியூட்டிஃபுல் ஆக்ட்” என்று குறிப்பிட்டுள்ளார். பிரதிநிதிகள் சபையில் 218-214 என்ற குறுகிய வாக்கு வித்தியாசத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை சனல் சபையில் 51-50 என்ற கணக்கில் நிறைவேறிய சட்டத்துடன் துணையாதிபர் ஜேடி வான்ஸ் மசோதாவை நிறைவேற்றினார்.
பிக் பியூட்டிஃபுல் மசோதா அமெரிக்காவின் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என அதிபர் கையெடுத்துள்ளார். பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பல தாக்கங்களை எது ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சமூக வலைதளமான ரூத் பக்கத்தில், நான் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிலிருந்து நாடு வளர்ந்து விட இன்னும் அதிக வளர்ச்சியை காணப் போகிறது எனக் கூறியுள்ளார்.
வரிக்குறைப்பு சட்டம் நீட்டிப்பு முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. 2017 ல் காலாவதியான நிலையில் சட்டத்தை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டங்களுக்கும் அதிலிருந்து அதிக நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அரசு மெடிசைட் செலவுகள் குறைக்க இந்த மசோதா தோதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
வாய்ப்புகளை உருவாக்குவது, தகுதி சோதனைகள் செய்வது இந்த மசோதாவில் அடங்கும். சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு நிதி வழங்குவதை நிறுத்தப்பட உள்ளது. பாலின மாற்று அறுவை சிகிச்சை சேவைகளுக்கு காப்பீடு தடை செய்யப்படுகிறது. கிராமப்புற மருத்துவமனைகளுக்கு 50 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மெக்சிகோ எல்லை சுவர்களை கட்ட 46.5 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தஞ்சம் கோருபவர்களுக்கு ஆயிரம் டாலர் கட்டணம் வசூலித்த நிலையில் புதிய மசோதாவின் படி தஞ்சம் கூறுபவர்கள் 100 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் மாநில வரி விலக்கு வரம்பு பத்தாயிரம் டாலரில் இருந்து 40 ஆயிரம் டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2017 வரி சட்டத்திற்கு முன்பு உள்ளூர் மற்றும் மாநில வரிகளை முழுமையாக கழித்துக் கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது. தற்போதைய 10 ஆயிரம் வரம்பு நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்கிறது என ஆதரவாளர்கள் கூறிய நிலையில் இந்த மசோதா இயற்றப்பட்டுள்ளது.