பாரம்பரிய முறையில் சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகள்!! அர்ஜென்டினா சென்ற பிரதமர் மோடி!! 

Special reception in traditional manner

பியூனோஸ் அயர்ஸ்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஐந்து நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அதன்படி கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, நமீபியா மற்றும் பிரேசில் ஆகிய ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
டிரினிடாட் அண்டு டுபாகோ, கானா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இரு நாடுகளின் முக்கிய தலைவர்களிடம் கலந்து பேசினார். இரு நாடுகளின் சார்பில் நரேந்திர மோடி அவருக்கு அந்த நாடுகளின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளில் பயணம் நிறைவடைந்து அர்ஜென்டினாவிற்கு பயணம் மேற்கொண்டார் மோடி.
இரண்டாவது நாள் பயணமாக அர்ஜென்டினாவில் பிரதமர் மோடிக்கு எஜீஜா சர்வதேச விமான நிலையத்தில் அர்ஜென்டினா பாரம்பரிய முறைப்படி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹோட்டலுக்கு சென்ற போது மோடி மோடி, பாரத் மாதா கீ ஜெய் என்று கோஷங்களை எழுப்பி இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர்.
பிரதமர் மோடி அவர்களுடன் உரையாடிய பின் வரவேற்கும் விதமாக கலாச்சார நடனம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 57 ஆண்டுகளில் இரு தரவு பயணமாக பிரதமரின் இந்த அர்ஜென்டினா பயணம் அமையும். வருகையை முன்னிட்டு இந்திய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பயணம் நிறைவடைந்து பின் பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள 17 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இறுதியாக நமீபியா நாட்டிற்கு சென்று பயணம் நிறைவடைந்த பின் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram