திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா என்ற பின் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பின் கடைசி நிமிடங்களில் கூறியதாவது, திருமண வாழ்க்கை தான் தற்கொலைக்கு காரணம். நீங்கள் யாரிடமும் தலைகுனிய வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆடியோவை காட்டுங்கள் போதும் என்று வாட்ஸ் அப்பில் தனது பெற்றோருக்கு மெசேஜ் அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் ரிதன்யா.
ரிதன்யாவின் குடும்பம் திருமணத்தின்போது பணம் நகை வரதட்சணையாக கொடுத்துள்ளது. ஆனால் மேலும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தப்பட்டதில் மனமுடைந்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் லோகேஸ்வரி வரதட்சணை கொடுமையால் திருமணமான நான்கு நாட்களிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் தற்கொலை சம்பவங்கள் குறிப்பாக வரதட்சணை கொடுமைகள் நடந்து வருகின்றன. 2017 முதல் 2021 வரை வரதட்சணை கொடுமையால் மட்டும் 35,493 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2022 இல் மட்டும் 6450 பேர் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்துள்ளனர்.
2022 ல் வரதட்சணை வழக்குகள் மட்டும் 1,323 வழக்குகள் பதிவாகியுள்ளன.13,534 வழக்குகள் 2021 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2022 ஆம் ஆண்டில் 29 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 31.7% குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என புள்ளி விவரங்கள் கூறுகிறது.
உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த் கூறுகையில், நவீன காலகட்டத்தில் வரதட்சணை என்றது உருவாக்கம் பெற்று ஸ்டேட்டஸ் என்ற பெயரில் திருமணங்கள் நடைபெறுகின்றன. சமூகத்தில் பல அழுத்தங்கள் நிலவி வரும் நிலையில் குடும்ப பிரச்சனைகள் தற்கொலைக்கு தூண்டுகிறது என கூறியுள்ளார்.