Cricket: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார பந்துவீச்சினை வெளிப்படுத்தி 10 விக்கெடுகளை வீழ்த்தினார் ஆகாஷ் தீப்.
இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடும் நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய அணி. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக சிராஜ் மற்றும் அதைவிட முக்கிய காரணமாக ஆகாஷ் டீப் பார்க்கப்படுகிறார் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஆகாஷ் டீப்.
முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய அணியில் மோசமான பந்துவீச்சாளர்கள் இருக்கும் நிலையில் முதல் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை என கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சிகள் மத்தியில் பெரிய விமர்சனம் எழுந்தது இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் மாற்று வீரர்களை களம் இறக்க வேண்டும் என விமர்சனங்கள் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அரிசி களமிறங்க வேண்டும் எனவும் கூறி வந்தனர் ஆனால் இரண்டாவது போட்டி தொடங்கிய நிலையில் மாற்றுவீரராக ஆகாஷ் டீப் எதிர்பாராத வகையில் களமிறங்கினார். இவர் களமிறங்கிய போது இவருக்கு எதிர்மறையான கருத்துக்கள் வந்தன இருந்த போதிலும் அவர் அசாத்திய பந்துவீச்சினை வெளிப்படுத்தி இரண்டு இன்னிங்ஸிலும் மொத்தம் 10 விக்கெடுகளை வீழ்த்தி அபார பந்துவீச்சு வெளிப்படுத்தி உள்ளார். இதன் மூலம் விமர்சகர்கள் மத்தியில் வந்த விமர்சனத்திற்கு பந்துவீச்சின் மூலம் முற்று புள்ளி வைத்துள்ளார்.