Cricket: இங்கிலாந்து அணி உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்ததன் மூலம் கில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் மொத்தம் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது இந்திய அணி. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் புதிய கேப்டனாக கில் நியமிக்கப்பட்டார். ஆனால் இது மிகப்பெரிய விமர்சனமாக எழுந்த நிலையில், நடைபெற்ற இரண்டு போட்டிகளிலுமே அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார் கேப்டன் கில்.
இந்நிலையில் முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வி சந்தித்தது ஆனாலும் இரண்டாவது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய அணி. இதில் மொத்தம் கேப்டன் கில் மட்டும் 430 ரன்கள் அடித்துள்ளார். மேலும் 58 ஆண்டுகளுக்குப் பிறகு எட்ஜ் பாஸ்டேனில் இந்திய அணி தனது முதல் வெற்றியை கேப்டன் கில் தலைமையில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த மைதானத்தில் 1967 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டி விளையாடிய நிலையில் இந்த இந்திய மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தான் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது இதன் மூலம் இந்த மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் இந்திய கேப்டன் இல் என்ற பெருமையை படைத்துள்ளார்.