கிரிக்கெட்: இந்திய மற்றும் இங்கிலாந்து இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஜடேஜா செய்த சம்பவம் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்துள்ளது.
நேற்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது போட்டியின் கடைசி நாளில், 427 ரன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி எடுத்த நிலையில் ஜடேஜா 69 ரன்களில் களத்தில் இருந்தபோது டிக்ளர் செய்தது இந்திய அணி. மேலும் இங்கிலாந்த அணி 607 ரன்கள் எடுத்தால் வெற்றி என பேட்டிங் களம் இறங்கியது.
இதில் லஞ்ச் பிரேக் செல்வதற்கு முன் மூன்று நிமிடங்கள் மட்டுமே இந்தியாவிற்கு பந்துவீச நேரம் இருந்தது. இதனால் யாரை பந்து வீச அழைப்பது என யோசித்து கேப்டன்கில் ஜடேஜா கையில் பந்தை கொடுத்தார். அதற்கேற்ற வகையில் ஜடேஜா 95 நொடிகளில் ஒரு ஓவரை வீசி முடித்தார்.
அவ்வாறு அவர் தொன்னுத்தி ஐந்து நொடிகளில் ஒரு ஓவரை வீசியதன் மூலம் மூன்று நிமிடங்களுக்குள் மற்றொரு ஓவர் வீசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதனால் அடுத்து பந்து வீச வாஷிங்டன் சுந்தர் வந்த நிலையில் ட்ரிக்கில் இங்கிலாந்தின் கேப்டன் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்தார். அப்போது வாஷிங்டன் ஸ்ட்ரோக்ஸ் விக்கெட்டை தட்டி தூக்கினார். இதனால் இங்கிலாந்தின் முக்கிய விக்கெட்டை வீழ்த்தியது இந்திய அணி. இதற்கு முக்கிய காரணம் ஜடேஜா செய்த அந்த சம்பவம் தான் அவர் 95 நொடிகளில் ஒரு ஓவரை வீசியதன் மூலமாகவே மற்றொரு ஓவர் வீச நேரம் கிடைத்தது இதனால் ரசிகர்கள் பலரும் விக்கெட் எடுத்ததை விட 95 நொடிகளில் ஜடேஜா பந்து வீசியதை பாராட்டி வருகின்றனர்.