Cricket: இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி குறித்து ஐசிஐசியின் முன்னாள் நடுவர் அணில் சவுத்ரி தற்போது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார் இது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
தற்போது இந்திய அணி கேப்டன் கில் தலைமையிலான டெஸ்ட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது இதில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியிருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 336 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி.
ஐபிஎல் போட்டி நடைபெற்ற முடிந்த நிலையில் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் அதனை தொடர்ந்து யாரும் எதிர்ப்பாராத வகையில் விராட் கோலி டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு அறிவித்தார் இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெஸ்ட் போட்டி என்றாலே அனைவருக்கும் இந்திய அணியில் ஞாபகம் வருவது விராட் கோலி தான் ஏனென்றால் ஒவ்வொரு விக்கெட் இருக்கும் அவர் செய்யும் செலிப்ரேஷன் மிகவும் உக்கிரமாக இருக்கும்.
அதைக் காணவே டெஸ்ட் போட்டியை காணும் ரசிகர்கள் என தனி பட்டாளமே இருக்கிறது இந்நிலையில் அவர் ஓய்வு பெற்றது மிகப்பெரிய வருத்தத்தை அளித்த நிலையில் ஐசிசி யின் முன்னால் நடுவர் அணில் சவுத்ரி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் பூர்வையில் எதிரணியினர் கோழியை கண்டு பயந்ததை நான் என் கண் முன்னே பார்த்திருக்கிறேன் அவர் களத்திற்குள் வந்தாலே அதிக அழுத்தத்திற்கு எதிரணியினர் உள்ளவர்கள் அணியில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட வீரர்களின் கவனம் எப்போதும் அவர் மீதுதான் இருக்கும் என கூறியுள்ளார்.