கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ரயில் பாதியின் கேட்டை பூட்டாமல் விட்ட காரணத்தால் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மங்குப்பம் அருகில் ரயில்வே கேட்டை கடந்து செல்ல பள்ளி வேன் முயன்ற போது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. திருச்செந்தூரிலிருந்து புறப்பட்ட அந்த ரயில் சென்னை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது வேன்மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டது பள்ளி வேன்.
இந்த கோர விபத்தில் இரு மாணவர் ஒரு மாணவி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் காயமடைந்த நான்கு மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ரயில்வே கேட்டை மூடாமல் அந்த கேட் கீப்பர் அசந்து தூங்கி விட்டதாக தெரியவந்துள்ளது.
அந்த கேட் கீப்பரின் அலட்சிய வேலையால் தான் கேட் பூட்டாமல் இருக்கவே வேன் சென்ற போது ரயில் மோதி விபத்துக்குள்ளானது இதனால் அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் இந்த விபத்தில் தற்போது மூன்று பேர் உயிரிழந்த நிலையில் வேன் உருக்குலைந்து காணப்படுவதால் பலி எண்ணிக்கை உயரம் எனவும் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பாதையில் மேலும் வந்த ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.