கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வாகனம் காலையில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு விரைந்துள்ளது. ரயில்வே தண்டவாளத்தை வேன் கடக்க முயன்றுள்ளது. அப்போது ரயில்வே டிராக்கில் சிதம்பரம் நோக்கிய ரயில் விரைந்துள்ளது. அது வேனின் மீது மோதி வேனை தூக்கி எரிந்துள்ளது. அதில் காலையில் இரு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தற்போது நான்கு குழந்தைகள் உயிர் இழந்துள்ளன.
ரயில்வே கேட்டை மூடாத கீப்பரை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். அவர்களை அப்புறப்படுத்தி போலீசார் அவரை கைது செய்துள்ளனர். படிக்கச் சென்ற குழந்தைகள் உயிரிழந்து வீடு திரும்பி உள்ளனர். வேன் டிரைவரும் ரயில் வருவதை கவனிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் கேட்டை மூடாத கீப்பரின் சிறு அஜாக்கிரதையால் நான்கு குழந்தைகளின் உயிர் பழியாகி விட்டது. மேலும் சம்பவத்தின் போது வேன் ஐம்பது மீட்டருக்கு மேலே தூக்கி வீசப்பட்டுள்ளது. பள்ளிக்கு குழந்தைகளின் பேக்குகள் நோட்டு புத்தகங்கள் ஆகியவை ஆங்காங்கே சிதறி கிடந்துள்ளன. பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இந்த சம்பவம் தற்போது தமிழ்நாட்டையே உலுக்கி வருகின்றது. பெருந்துயரத்திலும் ஆழ்த்தியுள்ள இச்சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு தலா ஐந்து லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு இரண்டு லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50,000 இழப்பீடு தொகை வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தின் போது ரயிலின் மின்கம்பம் அருந்து தனியே நின்ற இளைஞர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.





