தஞ்சாவூர் பெரிய கோவிலை தரிசித்து வருவதற்காக குமார், ஜெயா, நீலவேணி, துர்கா குழந்தைகள் மோனிஷா மற்றும் ஸ்டாலின் ஆகியோர் ஒரு காரில் சென்னையில் இருந்து புறப்பட்டு பயணம் செய்து வந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் இவர்கள் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கார் ஓட்டி வந்த குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.
ஜெயா,நீலவேணி துர்கா ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். இதனை அழைத்து குழந்தைகள் மோனிஷா, ஸ்டாலின் மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர் விக்னேஷ் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சை அளித்த பின்னர் போலீசார் விபத்து குறித்து விசாரிக்க உள்ளனர். தஞ்சை பெரிய கோயிலுக்கு சுற்றுலா வந்த போது இவ்வாறு நடந்துவிட்டதே என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.