பிப்ரவரி 26, 2025 இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்டின் சுவாரசிய நிகழ்வுகளை காண்போம். முதலிலேயே விஜயா முன்பே மருமகள் மீனாவை சிந்தாமணி மோசமாக திட்டுகிறார். வழக்கம்போல் விஜயா கண்டு கொள்ளவில்லை. நாடகத் தொடக்கத்திலேயே சிந்தாமணி பார்வதி வீட்டில் இருப்பதை கண்டு மீனா ஆச்சரியமடைகிறாள். விஜயா முன்னே மீனாவை சவால் விடுகிறார் சிந்தாமணி. அதற்கு விஜயாவும் வயசுல பெரியவங்க அவுங்க. அவங்கள எதிர்த்து உன்னால இதை செய்ய முடியாது என்று நெகட்டிவாக மீனாவிடம் கூறுகிறார்.
மீனா உடனே பதறிக்கிட்டு அப்படி சொல்லாதீங்க அத்தை! என் மருமக தான் ஜெயிப்பானு சொல்லுங்க அத்தை என்று கெஞ்சுகிறாள். ஆனால் விஜயா குணமாறாது அவரை அசிங்கப்படுத்தி செல்கிறாள். சிந்தாமணியும் விஜயாவை தூண்டுவது போல் மீனாவின் கொட்டத்தை நான் அடக்குகிறேன். அவளே வளர விடமாட்டேன் என்று கூறுகிறார். மீனா துணிச்சலாக அதையும் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்று விடுகிறாள். பார்வதிக்கு இப்போதுதான் சிந்தாமணியும் பிளான் புரிகின்றது. மீனாவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தான் விஜய் சேர்ந்துள்ளார் என்று புரிந்து கொள்கிறார். மீனா சிறிதும் இதனை வெளியில் சொல்லாது விதவிதமாக சாப்பாடு செய்து வைக்கிறாள். அனைவரும் ஒன்றாக சாப்பிடும் போது ரவி, பீசா ஒன்றை வாங்கி அனைவரும் ஷேர் செய்து சாப்பிடுகிறார்கள். ரவி அம்மாவிடம் கொடுக்க முற்பட, முத்து அவர்கள் தயவு செய்து உள்ளார்கள் சாப்பிட மாட்டார்கள் என்று பிடுங்கி வைத்துள்ளார்.
விஜயா டயட் சாப்பாடு இப்படி ஒரு நாள் மட்டும் செய்யக்கூடாது எல்லா நாளும் செய்ய வேண்டும் என்று மீனாவை திட்டுகிறார். நான் பணிபுரியும் அந்த ஒரு நாள் மட்டும் என்னால் செய்ய முடியாது என்று மீனா மறுக்கிறாள். அதற்கு மனோஜோ, அதெல்லாம் முடியாது நான் காசு தரேன்ல என்று கூற, முத்து முடியாதுடா நீ வேணும்னா சமைசவிடுகிறார்கள் கூறிவிட்டு சென்று விடுகிறார்கள். அடுத்து தான் ட்விஸ்டே… சாப்பிட்ட சாப்பாடு செரிக்காமல் மனோஜும், விஜயாவும் அடிக்கடி பாத்ரூம் செல்கிறார்கள். டயர்ட் ஆகி டைனிங் டேபிள் மேல் உட்காரும்போது, குடும்பத் தலைவர் அண்ணாமலை வந்து விசாரிக்கிறார். இதோடு இந்த எபிசோடு முடிகின்றது.