கிரிக்கெட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது தொறந்து ஜூலை 10 மூன்றாவது போட்டி தொடங்க உள்ளது இதில் முக்கிய வீரர் விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய அணி இங்கிலாந்தின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது இந்த தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. அடுத்து வரும் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு இரு அணி ரசிகர்களுக்கும் இரு மடங்காகி உள்ளது எனவே கூறலாம்.
இதனைத் தொடர்ந்து ஜூலை 10 நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முக்கிய பந்துவீச்சாளர் இந்திய அணியில் இடம் பெற மாட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகி வருகிறது. அந்த முக்கிய வீரர் முகமது சிராஜ், ஏனெனில் அவர் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி மொத்தமாக 73 ஓவர்கள் வீசி உள்ளார் நடைபெற்ற இரு போட்டிகளில் அதிகமாக ஓவர் வீசிய வீரர் முகமது சிராஜ்.
அது மட்டுமல்லாமல் முதல் போட்டியும் இரண்டாவது போட்டிக்கும் இடையில் 10 நாட்கள் இடைவெளி இருந்த நிலையில் மூன்றாவது போட்டிக்கு மூன்று நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. அதனால் முகமது சிராஜ்க்கு அடுத்து நடைபெற உள்ள மூன்றாவது போட்டியில் ஓய்வு வழங்க இந்திய அணி பேசி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் அவர் லாட்ஸ் மைதானத்தில் விளையாட ஆர்வம் காட்டுவதாகவும் கூறி வருகின்றன.