Cricket: இந்திய ஜாம்பவான் வீரர் விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து முதல் முறையாக மனம் திறந்து உள்ளார்.
இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி நடந்து முடிந்த பின் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவிப்பை வெளியிட்டார். இதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த சோகம் மறைவதற்குள் அடுத்த சோக குண்டை தூக்கிப்போட்டார் விராட் கோலி.
ரோகித் சர்மா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் திணறி வந்த நிலையில் அவர் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்ற பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் ஓய்வை அறிவித்தார். ஆனால் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த விராட் கோலி திடீரென ரோகித் சர்மா அறிவித்த கொஞ்ச நாட்களில் அவரும் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டார்.
இது ரசிகர்களிடையே பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது இந்நிலையில் அவர் ஓய்வு பெற்றது குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார். இதுகுறித்து விராட் கோலி குருவியில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை உங்கள் தாடிக்கு டை அடிக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஓய்வு பெற வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று அர்த்தம். என்று சூசகமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து மனம் திறந்துள்ளார் விராட் கோலி.


