திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று பவள விழா கொண்டாடப்பட்டுள்ளது. அவ்விழாவில் கலந்து கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் மாணவர்களை நட்புடனும் ஓர் அணியாகவும் திரள வேண்டும் என்று ஊக்கப்படுத்தி உள்ளார். அவர் அதில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு, நான் இங்கு அரசியல் பேசுவதற்காக வரவில்லை. ஆனால் மாணவர்கள் இடையே அரசியல் குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டும். இந்தக் கல்லூரியில் படித்த கே என் நேரு மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் திமுக கட்சியின் சீனியர்கள். அதேபோல் நீங்களும் நாளை வரவேண்டும். வரணும். அதுதான் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பெரிதும் மக்கள் சேவையில் உதவும்.
மாணவர்கள் எப்பொழுதும் நட்புடன் தொடர வேண்டும். கல்லூரி படிப்பு முதல் கடைசி காலம் வரை இந்த நட்பு நீடிக்க வேண்டும். மாணவர்கள் எப்பொழுதும் ஓரணியாக திரள வேண்டும். மாணவர்களின் சக்தி மிக அபரிவிதமானது. உங்கள் நட்புடன் நீங்கள் அடுத்த கட்ட வாழ்வை நோக்கி பயணிக்க வேண்டும். இந்தக் கல்லூரி பவள விழாவின் உங்களுக்கு ஒரு நற்செய்தி. மாணவர்களின் அடுத்த கட்ட வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் 20 லட்சம் லேப்டாப்களை கூடிய விரைவில் உங்களுக்கு வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குள் இது நிறைவேறும் என்று ஒரு டாக் உள்ளது. மேலும் கல்லூரி பவள விழா நடத்தி வந்தால் அந்த கல்லூரி எத்தனை மாணவர்களின் வாழ்க்கையை உலியால் செதுக்கி இருக்கும் என்று கல்லூரி குறித்தும் பல முக்கியத்துவ கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.