இன்றைய எபிசோடு தொடக்கத்தில் கோவத்தில் முத்து கிளம்பி விட, சீதா உடைய அம்மாவிடம் அருண் வந்து சீதா எங்கே என்று கேட்கிறார். ஏன் நல்ல நாள் அது உன் அழுதுட்டு இருக்கீங்க என்று கேட்டுவிட்டு சீதா எங்கே என்று கேட்கிறார். முதலில் இவர்கள் கல்யாணத்தை நடத்தி விடலாம் என்று அருணின் அம்மா கூறுகிறார். என் மாப்பிள்ளை இல்லாமல் நடக்காது கல்யாணம் என்று கூறி விட சீதாக்கும் எனக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது. இப்போ இங்க கல்யாணம் நடந்த ஆகணும் என்று அருண் கூறுகிறான்.
மற்றொருபுறம் மூன்று கிளாசை வைத்து திட்டிக்கொண்டு முத்துக்குடித்துக் கொண்டிருக்க, அங்கு வந்த ஒருவர் என்ன பிரச்சனை என்று கேட்கிறார். என் பொண்டாட்டி என்கிட்ட கேக்காம கல்யாணம் பண்ணி வச்சிட்டா என்று புலம்ப, உன் பொண்டாட்டி அறம் கூட ஓடிப் போயிட்டாளா என்று அவர் கேட்கிறார். உடனே அவரே அடித்து என் பொண்டாட்டி கண்ணகி டா என்று கூறிக் கொண்டிருக்க அந்தப்புறம் மீனா வந்து கண்கலங்கி நிற்கிறார். வாங்கங்க கல்யாணம் பண்ணி வச்சிடலாம் என்று கூப்பிட, அதுதான் ஏற்கனவே நடத்திட்டீங்களே என்று முத்து பதிலடி கொடுக்கிறார். சீதா உடனே முத்துவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க, முத்து அயராது நின்று கொண்டிருக்கிறார். மீனாவும் நான் தெரியாமல் தப்பு செய்து விட்டேன் என்று கெஞ்சி கொண்டிருக்கிறார். முத்து மனம் இறங்குவது போல் தெரியவில்லை.
இன்னொரு புறம் அருண் சீதாவின் அம்மாவிடம் இப்போ இங்கே என் கல்யாணம் நடந்து ஆக வேண்டும். ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சிடுச்சு. இது ஒரு சின்ன விஷயம். இதற்காக இவ்வளவு கோபம் என்று கேட்கிறார். யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணி வந்து நிற்கிறது உங்களுக்கு சின்ன விஷயமா என்று சீதாவின் அம்மா கேட்கிறார். அவள் ஏற்கனவே என் பொண்டாட்டி. என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலாமா இப்படி வெளியே போயிருக்கா என்று கேட்க, இப்ப கல்யாணம் ஆனா உங்களுக்கே இப்படி இருக்கணா. ஒரு வருஷமா என் மூத்த பொண்ணு மாப்பிள்ளை ஓட வாழ்ந்துட்டு வராள். அவ அவ புருஷனுக்கு தெரியாம உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்க என்று கேட்க அது அவர்கள் பர்சனல் எனக்கு தெரியாது என்று திமிராக பதில் கூறுகிறார். மண்டபத்தில் மனோஜ் இங்கே கல்யாணம் நடக்கிற மாதிரி தெரியல வாங்க போகலாம் என்று கூற அண்ணாமலை திட்டிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.