Cricket: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இங்கிலாந்தின் வேகம் பந்துவீச்சாளர்.
இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மொத்தம் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடி முடித்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளது. இதனால் மூன்றாவது போட்டியின் மீதான எதிர்பார்ப்பு என்பது இதற்கு முன் இருந்த இரு போட்டிகளை விட இரு மடங்காக அதிகரித்துள்ளது எனவே கூறலாம்.
இந்நிலையில் இங்கிலாந்து அணியில் நான்காண்டுகளுக்கு பிறகு அதாவது 2021 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இறுதியாக விளையாடிய இங்கிலாந்தின் வேகம் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் நாளை தொடங்க உள்ள டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாளை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லாட்ஜ் மைதானத்தில் தொடங்க உள்ளது. லாட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்கியுள்ள இந்த போட்டியில் பிட்ச் வேகபந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இங்கிலாந்து அணிக்கு சாதகமாக இருக்குமா? என எதிர்பார்க்கப்படுகிறது.