கிரிக்கெட் உலகின் பாரம்பரிய மிக்க இரு அணிகளான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி வரலாறு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த இரு அணிகளும் இதுவரை 136 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 51 போட்டிகளிலும், இந்தியா 35 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 50 போட்டிகள் டிரா ஆக முடிந்துள்ளன.
தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் போட்டி: லீட்ஸில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்திய அணி சிறப்பாக பேட் செய்த போதிலும், இங்கிலாந்து அணி தங்கள் முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் குவித்து, இந்தியாவை விட 373 ரன்கள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டி:டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் குவித்து இங்கிலாந்தை திக்குமுக்காடச் செய்தது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இந்த இன்னிங்ஸில் 269 ரன்கள் குவித்து இரட்டை சதம் அடித்தார். இது இங்கிலாந்து மண்ணில் ஆசிய கேப்டன் அடித்த முதல் இரட்டை சதம் ஆகும். ரவீந்திர ஜடேஜா 89 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இரண்டாவது இன்னிஙசில் பேட்ஸ் மேன்களின் சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனால் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர் (1-1)சமநிலையில் இருப்பதால், இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். இரு அணிகளும் தொடரில் முன்னிலை பெற கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


