இவ்வளவுதான் உருகி உருகி காதலித்தாலும் இந்த ராசியினர்களாம் சுட்டு போட்டால் கூட லவ் செட் ஆகாது. ஏதோ ஒரு விதத்தில் ஏமாற்றப்படுபவர்கள் ஆக தான் இருப்பார்கள். இவர்கள் காதலிப்பதை விட வீட்டில் பார்க்கும் பெண் அல்லது ஆணை திருமணம் செய்து கொள்வது மிகவும் நல்லது.
மிதுனம்
காதலுக்கு ஒத்துப்போகாத ராசிகளில் முதலாவதாக இருப்பது மிதுனம் தான். இந்த ராசிக்காரர்களின் மனநிலை ஒரு நிலையுடன் இருக்காது. இதனால் எதிர் துணையுடன் வீண் விவாதம் ஏற்படும். அதேபோல இதுவே ஏறத்தாழ்களை சந்திக்க நேரிடும். இதனால் தாங்கள் துணையிடம் எதையும் நேரடியாக சொல்ல தவறி விடுகின்றனர். இதுவே அவர்களின் காதல் முறிவுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.
கன்னி
இரண்டாவது இடத்தில் இருப்பது கன்னி ராசி இவர்கள் தன்னிலையில் சரியாக இருந்தாலும் துணையிடமிருந்து பெரும் எதிர்பார்ப்புகள் கொண்டவர்களாக இருப்பர். இதனால் இவர்கள் தேவை பூர்த்தி ஆகாத நிலையில் வருத்தம் அடைய நேரிடும். சில நேரங்களில் இதனை கோபமாக வெளிப்படுத்துவர். இது காதலர்களுக்கிடையே பொருந்தாது பிரிய நேரிடும்.
விருச்சகம்:
விருச்சக ராசியினர் மூன்றாவது இடத்தில் உள்ளனர் இவர்கள் முக்கியமாக காதல் பிரிவுக்கு காரணம் இவர்களின் உணர்வை துணையிடம் வெளிப்படுத்துவதை தவறுவது தான். விருச்சிக ராசியை விரும்பும் பெண்கள் மற்றும் ஆண்கள் யாராக இருந்தாலும் இவர்களிடமிருந்து அபரிவிதமான உணர்வுகளை கொட்ட வேண்டும் என்று நினைப்பர். ஆனால் இதை இவர்கள் செய்ய தவற விடுவதால் காதல் மறைவு ஏற்படுகிறது.
தனுசு
நான்காவதாக இருப்பது தனுசு ராசி, இவர்கள் மிகவும் சுதந்திர நிலையுடன் இருப்பதால் இவர்களை அடக்க நினைக்கும் எந்த ஒரு துணையாக இருந்தாலும் கட்டாயம் வெறுக்க நேரிடும் இதுவே இவர்களின் காதல் முடிவுக்கு வர முக்கிய காரணமாக அமைகிறது.