காசா: காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுத குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டது அனைவருக்கும் தெரிந்தது. இஸ்ரேலில் இருந்து மேலும் 251 பேரை பழைய கைதிகளாக ஹமாஸ் ஆயுத குழுவினர் கடத்திச் சென்றனர்.
ஹமாஸ் ஆயுத குழு மீது போர் அறிவித்தது இஸ்ரேல். காசா முனையில் அதிரடி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தை நடந்த போது பினைய கைதிகளை ஒப்படைப்பதாக பேசப்பட்ட நிலையில் சில பனைய கைதிகளை மட்டும் ஒப்படைத்தனர். ஆனாலும், போர் நிறுத்தப்படவில்லை.
ஹமாஸ் ஆயுத குழுவினரால் பினைய கைதிகளில் சிலர் கொல்லப்பட்டதும், பின் அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறி இருந்தது. தற்போதைய இஸ்ரேல் நிலவரப்படி ஹமாஸ் ஆயுத குழுவின் பிடியிலிருந்து 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 50 பேர் இன்னும் பழைய கைதிகளாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் பினைய கைதிகளை மீட்க தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக பழைய கவிதைகளை மீட்கவும் மற்றும் ஹமாஸ் குழுவினரை அடியோடு ஒழிக்கும் நோக்கத்திலும் இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது. காசா முனையில் இஸ்ரேல் தரைவழி தாக்குதல் மற்றும் வான்வழித் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
மீண்டும் நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில் சுமார் 40 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஹமாஸ் ஆயுத குழுவினர் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையேயான போரில் காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57,575 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.