கவுதமாலா சிட்டி: கவுதமாலா சிட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கவுதமாலா சிட்டியில் தொடர்ந்து 150 க்கு மேற்பட்ட நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது ரிக்டர் அளவு கோளில் 3.0 முதல் 5.7 வரை பதிவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி பெர்னாண்டோ ஆரிவாலோ உறுதிப்படுத்தும் வகையில் நிலநடுக்கத்திற்கு நான்கு பேர் பலியாகி உள்ளனர் என்ற தகவல் தெரிவித்தார். பெண்மணி தான் வளர்க்கும் செல்லப்பிராணி நாயுடன் நிலத்தில் புதைந்து இறந்துள்ளார். 13 வயது சிறுவனின் உடல் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
எஸ்குவின்டாலா பகுதியில் லாரியில் சென்ற போது நில அதிர்வால் பாறைச்சாழ்ந்து விழுந்ததில் இரண்டு பேர் பலியாகினர். தொடர்நிலை நடுக்கங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த மக்கள் ஒதுங்குவதற்கு கூட இடமில்லாமல் தெருக்களில் குடும்பங்களுடன் உறங்கியுள்ளனர்.
திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் நிலச்சரிவுகள் ஆங்காங்கே ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவுகள் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.