ஹாங்காங்: சீனாவில் பள்ளி குழந்தைகளுக்கு சாப்பிடும் உணவில் பெயிண்ட் கலந்து கொடுத்ததில் 233 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வடமேற்கு தியான்ஷூய் நகரில் ஹெஷி பெய்க்சின் என்று தனியார் பள்ளி இயங்கி வருகிறது.
இதில் குழந்தைகளுக்கு உணவில் பெயிண்ட் கலந்து கொடுத்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளி குழந்தைகளின் உணவு பார்ப்பதற்கு கலர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்பதற்காக சமையல் பணியாளர் பெயிண்டை கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
பெயிண்டில் இருந்த காரியம் என்ற உலோகத்தின் அளவு அதிகரித்து உள்ளதால் ரத்தத்தில் கலந்து இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளியில் 251 மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் 233 பேர் உணவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
21 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காலை உணவாக வழங்கப்படும் கேக், மக்காச்சோளம் போன்றவற்றில் காரியம் அதிக அளவில் கலந்து இருப்பது தெரியவந்தது.
தனியார் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவாக வழங்கப்படும் கேக் மக்காச்சோளத்தில் செய்யப்பட்ட கான் ரோல் ஆகியவற்றில் காரீயம் அதிக அளவில் கலந்திருப்பது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தனியார் பள்ளியில் முதல்வர் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கு முன்னர் கடந்த 2008 இல் பால் பவுடரில் மெலமைன் என்ற ஆலைக் கழிவு பொருள் கலந்ததால் ஆறு குழந்தைகள் பலியாகி குறிப்பிடத்தக்கது. இதில் மேலும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்க செய்த உரிமையாளர்களுக்கு மரண தண்டனையை வழங்கியது சீன அரசு.