ஜூலை 10 சிறகடிக்க ஆசை எபிசோடு!! குடிபோதையில் முத்து!!

இன்றைய எபிசோடு தொடக்கத்தில் அருண் சீதா எங்கே சென்றாள் என்று தெரியவில்லை. போன் செய்தாலும் எடுக்க மாட்டேங்கிறாள் என்று சந்திராவிடம் புலம்பி கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பெரிய ஆபீசர் மற்றும் கமிஷனர் அங்கு வருவதை கேள்விப்பட்ட அருண் கல்யாணம் நடக்காது என்று நான் சொல்லிவிடுகிறேன் என்று கூறுகிறான். அந்த நேரத்தில் அண்ணாமலை, உங்களுக்கும் சீதாவுக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு. இந்த மாதிரி நேரத்துல கல்யாணம் நடக்காது சொன்னீங்கன்னா. அவ வாழ்க்கை என்ன ஆகிறது என்று கேட்க அருணும், எனக்கு சீதா தான் எல்லாம். ஆனா இப்போ அவளை காணாமே என்று சொல்லிக் கொண்டு இருக்க மீனா சீதா இருவரும் அங்கு வருகின்றனர்.

பின்னாலேயே முத்துவை போதை தள்ளாடும் நிலையில் செல்வம் அழைத்து வருகிறார். தயவு செய்து நிலைமையை புரிஞ்சுகிட்டு போய் தாலி கட்டுங்க என்று அண்ணாமலை கூற இருவரும் மணமேடை ஏறி உட்காருகிறார்கள். மீனா அர்ச்சதை எடுத்துக்கொண்டு அனைவரிடமும் கொடுக்க வருகிறாள். விஜயா நீ சரியான ஆளுடி என்று மீனாவை குறிப்பிட கடுப்பாகிறாள். முத்து மேடை ஏறாது கீழே நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறான்.

கல்யாணம் ஒரு வழியாக நல்லபடியாக முடிந்து வருகிறது. கல்யாணம் முடிந்த பின் முத்துவை மேடைக்கு அழைக்கிறாள் மீனா. நீ முன்னாடி பண்ணி வச்ச ரெஜிஸ்டர் மேரேஜுக்கு என்னை கூப்பிடல. இப்ப மட்டும் எதுக்கு கூப்பிடுற. நான் இனிமே உங்க வீட்டு விஷயத்தில தலையிட மாட்டேன். உங்க வீட்டு பக்கமும் வரமாட்டேன். அதே மாதிரி நீயும் வராத என்று மீனாவின் தலையில் குண்டை தூக்கி போடுகிறான். மீனா என்னங்க என்று கேட்க பேசாத வரவே வராதா என்று கூறிவிட்டு சென்று விடுகிறான். வீட்டில் அனைவரும் முத்து குடித்துவிட்டு வந்ததை சொல்லி திட்டிக் கொண்டே இருக்க அண்ணாமலை அமைதியாக இருக்கிறார். முத்து அங்கு வந்து குடிபோதையில் அப்பா என்ன திட்டுப்பா என்று சொல்ல அண்ணாமலை பேசாமல் திரும்பி விடுகிறார். முத்து ஒவ்வொருவராக திட்டச் சொல்லி கேட்டுக் கொண்டிருக்கிறார். அனைவரும் அவரை அவாய்ட் செய்து விடுகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram