கிரிக்கெட்: இந்திய அணியின் இளம் வேலப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான நிதிஷ்குமார் ரெட்டி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடிய வரும் நிலையில் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடர் தொடங்கியது. இதற்கு முன் நடைபெற்ற இரு போட்டிகளிலும் இரு அணிகளும் தள ஒரு போட்டிகளில் வென்று சமநிலையில் இருந்த நிலையில் இந்த மூன்றாவது போட்டி மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது.
எனினும் இந்த லார்ட்ஸ் மைதானம் வேதபந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் பேட்ஸ்மேனகளுக்கு சற்று பின்னடைவாகவே இருக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்தின் முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கார்லி மற்றும் டக்கட் விக்கிட இயக்காமல் விளையாடி வந்த நிலையில் 14-வது ஓவரை வீசு வந்தார் நிதிஷ்குமார் ரெட்டி.
முதல் பந்தில் இரண்டு ரன்கள் கொடுத்து நான்காவது பந்தில் ஒருவிக்கட்டும் ஆறாவது பந்தில் ஒருவிக்கட்டும் என இரண்டு தொடக்க வீரர்களின் விக்கட்டையும் ஒரே ஓவரில் தட்டி தூக்கினார் நிதீஷ் குமார் ரெட்டி. தற்போது 44 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து போப் மற்றும் ஜோ ரூட் இருவரும் களத்தில் விளையாடி வருகின்றன.