கிங்காங் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அது தொடர்பான பத்திரிக்கையை நடிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலருக்கும் நேரில் சென்று கொடுத்தார். கடந்த சில நாட்களாகவே இது தொடர்பான விவாதங்கள் வெளியாகி வந்தது. முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், கார்த்தி, விஷால், விஜய் சேதுபதி, சிலம்பரசன் (சிம்பு), யோகி பாபு, லதா ரஜினிகாந்த், சார்லி, உதயநிதி, தேவயானி, ஜெய் கணேஷ், கன்னட நடிகர் சிவராஜ்குமார் என பலருக்கும் நேரில் சென்று பத்திரிக்கையை வைத்தார். இந்நிலையில், நேற்று காலை சென்னையில் அவரின் மகள் திருமணம் நடைபெற்றது. ஆனால், அங்கு அவர் பத்திரிக்கையை வைத்த யாரும் கலந்து கொள்ளவில்லை.
திருமண தொடர்பான வீடியோக்களையே சிலர் பகிர்ந்த நிலையில் நேரில் சென்று பத்திரிக்கை வைத்தும் நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை’ என்ற பதிவு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. ஆனாலும், திருமணம் கோவிலில் நடந்துள்ளது. அதனால் இதில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இன்று மாலை நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள் என சொல்லப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவார்களா மாட்டார்களா, என்பதை காத்திருந்து பார்ப்போம்.