ஓசாகா: ஜப்பானின் ஒசாகா பகுதியில் அமைந்துள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையம் தற்போது மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொறியியல் அதிசயமாக கருதப்படும் கன்சாய் சர்வதேச விமான நிலையம் கடலில் மூழ்க தொடங்கியதால் பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் ஒசாகா நகரில் அமைந்துள்ள செயற்கை தீவில் கன்சாய் சர்வதேச விமான நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை ஆனது கடலின் மேல் பரப்பில் மிதப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. 1980 ல் தொடங்கப்பட்ட சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமான பணி ஆனது 1994 ல் நிறைவு பெற்றது. நிறைவடைந்த பின்னரே சர்வதேச விமான நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.
களிமண் அஸ்திவாரத்தை அமைத்ததால் சர்வதேச விமான நிலையம் ஆனது கடலின் மேற்பரப்பில் மிதப்பதாக கருதப்பட்டு அமைக்கப்பட்டது. இந்த கட்டமைப்பு ஆனது நீண்ட காலத்திற்கு வலுவாக இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் தற்போது கடல் கடலுக்குள் விமான நிலையம் ஆனது மூழ்க ஆரம்பித்துள்ளது. செயற்கை தீவில் அமைந்துள்ள அதன் மேற்பரப்பு 13 அடியை கொண்டது.
மேலும், விமான நிலையம் 45 அடியையும் தற்போது மூழ்கியுள்ளது. மூழ்கத் தொடங்கியதால் புயலை தாங்கும் தன்மை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் கடல் மட்டத்தின் உயர்வு இயற்கை காரணிகள் மற்றும் களிமண் அடித்தளத்தால் எடையை தாங்கி நிற்க முடியும் நிலை ஆகியவற்றை குறித்து விமான நிலையம் ஆராய்ச்சியாளர்கள் மூழ்கி வருவதாக கூறுகின்றனர்.
விமான நிலையம் ஜப்பான் பிராந்திய பொருளாதாரத்திற்கு முக்கிய வளர்ச்சியை வகித்து வந்த நிலையில் கடந்த 2024 இல் மட்டும் மூன்று கோடி பயணியரை பார்த்துள்ளது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் எந்த பயனியரின் பொருட்களும் காணாமல் போனதில்லை என்ற பெருமையும் இந்த சர்வதேச விமான நிலையத்திற்கு சிறப்பை தரும்.
விமான நிலையம் மூழ்க தொடங்கியதால் அதன் கட்டமைப்புகளை பலப்படுத்தும் பணியில் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 1,280 கோடி ரூபாய் செலவில் கடற்கரை பகுதிகளை பலப்படுத்த சுவர்களை எழுப்புவது மற்றும் செங்குத்து மணல் வடிகால்கள் அமைத்தல் போன்ற பணிகளை ஆரம்பிக்க உள்ளனர்.


