திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த பந்தளத்தில் வசித்து வந்தவர் அஷ்ரப். இவரது மகள் ஹன்னா (11 வயது) அருகில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கலந்து சில நாட்களுக்கு முன்பு பக்கத்து வீட்டில் உள்ள பூனையுடன் விளையாடி உள்ளார்.
முதலில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை திடீரென கால் நகத்தால் கீரி உள்ளது என கூறப்படுகிறது. பூனையின் கால் நகம் கீறியதால் சிறுமி படுகாயம் அடைந்துள்ளார். சிறுமியை மீட்டு பெற்றோர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சிறுமியின் பள்ளி ஆசிரியர்கள் கழுத்தில் இருந்த வீக்கத்தை கவனித்து பெற்றோரிடம் கூறியுள்ளனர். தொடர்ந்து இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி போட்ட பின்னும் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. சிறுமியை பத்தனம்திட்டா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நல குறைவு அதிகரித்ததால் மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிவிஎஸ் சிகிச்சை நடைபெற்றது. இருப்பினும் சிகிச்சை அளித்து பலனில்லாமல் நேற்று முன்தினம் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.