லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தில் கள்ளக்காதனுடன் வாழ்வதற்காக மூன்று குழந்தைகளை ஆற்றில் தள்ளி கொடூரமாக கொலை செய்த தாய்க்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அவுரையா பகுதிக்கு அருகே உள்ள தேவர்பூர் கிராமத்தை சேர்ந்த பிரியங்கா என்பவர்.
இவருக்கு திருமணமாகி 4 ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில் கணவர் இறந்துவிட்டார். அதன் பின்னர் பிரியங்காவுக்கு ஆசிஷ் என்று ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அடிக்கடி ரகசிய தொடர்பில் இருந்து வந்தனர். சேர்ந்து வாழ முடிவு செய்த பின் குழந்தைகள் இடையூறாக இருப்பதாக எண்ணி உள்ளனர்.
இடையூறாக இருக்கும் குழந்தைகளை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டில் ஒரு நாள் தங்கள் ஊருக்கு அருகே உள்ள ஆற்றங்கரைக்கு குழந்தைகள் அழைத்து சென்று இரக்கம் இன்றி ஆற்றில் தூக்கி வீசி கொலை செய்துள்ளார். மாதம் ஆதித்யா மங்கள் ஆகிய குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மூத்த மகனான சோனு அதிர்ஷ்டவசமாக அக்கம் பக்கத்தினர் காப்பாற்றப்பட்டார். இதுகுறித்து பிரியங்காவின் மைத்துனர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரி அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு பதிவின் பேரில் பிரியங்கா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆசிஷ் ஆகியோரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு அவுரையா அமர்வு நீதிமன்றத்தின் கீழ் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் குழந்தைகளை கொன்ற தாய்க்கு தூக்கு தண்டனை வழங்கியது நீதிமன்றம். பிரியங்காவுக்கு தூக்கு தண்டனை மற்றும் ரூ. 2.5 லட்சம் அபராதம், ஆசிஷ்க்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பளித்தது நீதிமன்றம்.