வாஷிங்டன்: அமெரிக்கா அதிபராக கடந்த ஜனவரி மாதம் இருந்து டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். பதவியேற்ற முதல் நாளில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் டிரம்ப். குறிப்பாக ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றில் வரிவிதிப்பு முறையை அமலுக்கு கொண்டு வந்தார்.
இஸ்லாம் மீதான வரி விதிப்புகளை அதிகரித்தார். இதனால் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் மற்றும் அதிபர் ட்ரம்புக்கும் இடையே விவாதங்கள் நடந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்களை நாடு கடத்தவும் நடவடிக்கை எடுத்தார்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் அகதிகளை அவர்களது சொந்த நாடுகளுக்கு நாடு கடத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படி அகதிகளின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம் கார்பென்டிரா, கமெரிலா ஆகிய பகுதிகளில் உள்ள பண்ணைகளில் சட்டவிரோதமாக அகதிகள் தங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்ததன் அடிப்படையில் இரண்டு பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தியுள்ளனர் அதிகாரிகள். சோதனை நடத்தியதில் இரண்டு பண்ணைகளிலும் சட்டவிரோதமாக அகதிகள் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இரண்டு பண்ணைகளிலும் சேர்த்து 200 பேரை அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட அகதிகள் மெக்சிகோ போன்ற நாட்டை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் அகதிகள் கண்டுபிடிக்கபடுவார்கள் என கூறப்பட்டுள்ளது.