கனடா பொருட்கள் மீது 35%வரி!! அமலுக்கு கொண்டு வரும் டிரம்ப்!! ஆகஸ்ட் 1 முதல் ஆரம்பம்!! 

35% tax on Canadian goods

வாஷிங்டன்: ஆகஸ்ட் 1 தேதி முதல் கன்னட பொருட்கள் மீது 35 சதவீத வரி விதிப்பை அமலுக்கு கொண்டு வந்துள்ளார் டிரம்ப். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வரி விதிப்பு என்ற பெயரில் பல்வேறு நாடுகளின் மீது வரிகளை விதித்து அச்சுறுத்தி வருகிறார்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மீது அதிக வரிகளை விதித்து வருகிறார். அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்றதில் அனைத்து நாடுகளின் மீதான பரஸ்பர வரி விதிப்பு கால நீட்டிப்பு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாடுகளின் மீது விதிக்கப்பட்ட புதிய வரி விதிப்பு தொடர்பான கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதன்படி 22 நாடுகளின் மீது வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மலேசியா, ஜப்பான், வங்காளதேசம் போன்ற 14 நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படுவதை கையெழுத்திட்ட கடிதங்களை அனுப்பியுள்ளார் ட்ரம்ப். அமெரிக்காவுக்கு கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 35 சதவீதம் வரிகள் விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கன்னட பிரதமர் மார்க் கார்னிக்கு அனுப்பியுள்ள கடிதத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு எதிராக நிதி ரீதியாகவும் பழிவாங்கினாலும் அமெரிக்கா கனடாவுடன் சேர்ந்து பணியாற்றும் என ஒப்புக் கொண்டு உள்ளார். அமெரிக்கா கனடா உடனான வர்த்தக உறவு நீடிக்கும்.
கனடா போதைப் பொருட்களை அமெரிக்காவுக்கு கடத்தப்படுவது தடுக்கப்பட்டது. இந்நிலையில் புதிய வரிவிதிப்புகள் கனடா ஏற்காமல் இருந்தால் வரி அதிகரிப்பு நடவடிக்கை கடுமையாக இருக்கும் என கடிதத்தில் கூறியுள்ளார் டிரம்ப். இந்த வரி விதி போனது ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram