குஜராத்: குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றில் அமைந்துள்ள பாலம் இரண்டு நாட்களுக்கு முன்பு இடிந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தின் போது சென்ற ஆறு வாகனங்கள் ஆற்றில் விழுந்தது.
அதிலிருந்து சிலர் மாயமான நிலையில் படுகாயங்களுடன் ஒரு சிலரை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு தேடும் பணி தீவிரமாக நடந்த நிலையில் ஒருவர் உடல் மீட்கப்பட்டது. விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை இருவதாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து வதோதரா கலெக்டர் அணில் தமேலியா கூறுகையில், விபத்தில் மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் நேற்று இரவு ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். பாலம் இடிந்து விழுந்த விவகாரத்தில் மாநில சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையின் 4 பொறியாளர்கள் இடைநீக்கம் செய்துள்ள முதல் மந்திரி பூபேந்திர படேல்.
விபத்துக்கான காரணம் குறித்த முதல் கட்ட விசாரணையில் ஆற்றுப் பாலத்தில் இடிந்து விபத்துக்கு “பெடெஸ்டல், ஆர்ட்டிகுலேஷன்” என்ற இணைப்பு நொறுங்கியது முக்கிய காரணம் என தெரியவந்தது. பாலம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து 7000 பாலங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில சுகாதார மந்திரி ருஷிகேஷ் படேல் நேரில் பார்வையிட்டார்.
மேலும், அவர் கூறுகையில் பாலத்தின் தூண் மற்றும் இருப்பு நொறுங்கியது விபத்துக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது என்று 30 நாளுக்குள் இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அடுத்த கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.