மும்பை: மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மசூதி மற்றும் வழிபாட்டுத்தலங்களில் உள்ள ஒலித்துருக்கிகளை எதிர்க்கும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. சட்டவிரோதமான ஒலிபெருக்கிகளை கண்டறியப்பட்ட பின் அவைகள் அகற்றப்பட்டது.
மாநில சட்டமன்றத்தின் பாஜக உறுப்பினர் சுதிர் முங்கந்திவார் எழுப்பிய தீர்மானத்தின் பதிலளிக்கும் வகையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், மும்பை உட்பட்ட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் வழிகாட்டு தளங்களில் இருந்து 3367 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக மும்பை மசூதிகளில் மட்டும் 1059 ஒலிபெருக்கிகள் நீக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவில்களில் 48 ஒலிபெருக்கிகள், குரூத்வாராக்களில் நான்கு ஒலிபெருக்கிகள், சர்ச்சுகளின் 10 ஒலிபெருக்கிகள், இதர வழிபாட்டுத் தலங்களில் 147 ஒலிபெருக்கிகள் என அனைத்து ஒலிபெருக்கிகளும் அகற்றப்பட்டுள்ளன. இனி யாராவது வழிபாட்டுத் தளங்களிலோ அல்லது மற்ற இடங்களிலோ ஒலிபெருக்கியை பொறுத்த நினைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் பேசுகையில், சரியான அனுமதி பெறாமல் ஒலிபெருக்கியை பொருத்த நினைத்தால் அப்பகுதியில் இருக்கும் காவல் துறையினர் பொறுப்பு எனவும், இந்த திட்டத்தை அமல்படுத்த தேவையான சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்றும் கூறினார்.
சட்டவிரோதமாக ஒலிபெருக்கிகள் மற்றும் அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை குறித்த அறிக்கையை அரசு சட்டமன்ற கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு பதில் அளித்த தேவேந்திர பட்னாவிஸ், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மசூதிகளில் இருந்து அகற்றிய ஒலிபெருக்கிகள் குறித்து எந்த அறிக்கையும் தாக்கல் செய்ய அவசியம் இல்லை என்று கூறினார்.
ஒலி மாசுபாட்டை கட்டுப்படுத்த முதல்வர் எடுத்துள்ள இந்த நடவடிக்கையானது பாராட்டக்கூடியது என்று ஆதித்ய தாக்கரே பாராட்டியுள்ளார். விழா காலங்களில் ஒலிபெருக்கிகளை பொருத்த அனுமதி கேட்டு வருபவர்களை அரசு தண்டிக்க கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக ஒலிபெருக்கியை அகற்றி இருக்கிறீர்கள். எந்தவித மத பதற்றமும் ஒலிபெருக்கியால் ஏற்படவில்லை என்றும், தற்போது மும்பை ஒலிபெருக்கி இல்லாத நகரமாக மாறிக்கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.