சென்னை: திரையுலகில் மூத்த நடிகை ஆன சரோஜா தேவி இன்று காலமானார். சரோஜாதேவியும் மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக 1960 காலகட்டங்களில் வளம் வந்தவர் சரோஜாதேவி.
அவர் தனது 87 வது வயதில் வயது முதிர்வு காரணமாக இன்று பெங்களூருவில் காலமானார். சரோஜாதேவியின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,என் டி ஆர், ஜெமினி கணேசன் மற்றும் நடிகர் திலகம் எம்ஜிஆர் போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடித்தவர். பல வெற்றி படங்கள் இன்றளவும் கொண்டாடப்படுகிறது. முக பாவனைகள் மற்றும் நளினமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர்.
“அபிநயா சரஸ்வதி” என அனைவராலும் போற்றப்படுபவர். குறிப்பாக நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், லவ் பேர்ட்ஸ், உன்னை ஒன்று கேட்பேன், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், தொட்டால் பூ மலரும் போன்ற வெற்றி பாடல்கள் இன்றளவும் அனைவரின் மத்தியில் ஈர்க்கப்படுகிறது. சுமார் 200 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பத்மஸ்ரீ, பத்மபூஷன், இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது போன்ற எண்ணற்ற பெருமைகளை வாங்கி குவித்துள்ளார். சரோஜாதேவி மறைவு திரையுலகங்களில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரை யாருடனும் ஈடு செய்யாத அளவுக்கு தனது நளினமான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
சரோஜாதேவியின் மறைவு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அன்புமணி ராமதாஸ் போன்ற அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.