காசாமுனை: இஸ்ரேல் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி ஹமாஸ் அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். மேலும், நூற்றுக்கணக்கானுறை பணைய கைதிகளாக சிறை பிடித்து சென்றனர்.
பனைய கைதிகளாக பிடித்து சென்றவர்களை கொன்றுள்ளனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மீதம் இருப்பவர்களின் நிலை என்னவென்று இதுவரை தகவல்கள் இல்லை. அப்போதிலிருந்து தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கிய போது 21 மாதங்களாக நடைபெற்று வந்தது. காசா பகுதியில் மட்டும் 58 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காசா பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க மனிதாபிமான அறக்கட்டளையிடம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வழங்கி வருகிறது. ஐந்து சரக்கு லாரிகளில் நிவாரண பொருட்கள் வருவதால் அவற்றை பெறுவதற்கு கூட்ட நெரிசல்கள் ஏற்படுகின்றன.
குறிப்பாக நுசைரத் முகாமில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்ட இடத்தில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது 20 குழந்தைகள் உள்ளிட்ட 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்த போது தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.
காசாவின் உணவின்றி தவிப்பவர்களுக்காக அறக்கட்டளை மூலம் நிவாரண பொருட்கள் வழங்கும் போது நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் பரிதாபமாக இருபது குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.