சென்னை: கேரள மாநிலத்தில் பள்ளி வகுப்பறைகளில் கடைசி இருக்கை மாணவர் என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் ப வடிவ வகுப்பறை அமைக்கப்பட்டு வருகின்றது.
கேரளாவைப் போலவே தமிழ்நாட்டிலும் ப வடிவ வகுப்பறைகள் அமைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ப வடிவ வகுப்பறைகள் அமைக்கப்பட்டால் கரும்பலகை மற்றும் ஆசிரியர் கூறுவதை தெளிவாக பார்க்க முடியும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையே அணுகுமுறை உன்னிப்பாக கவனிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. ஆசிரியர்கள் கூறும் தகவல்களை கேட்பதில் சிரமம் இருக்காது என கல்வித்துறை கூறியுள்ளது. ப வடிவத்தில் அமைக்கப்படுவதால் காற்றோட்ட வசதி மற்றும் ஒளி வசதி ஆகிய குறைகள் இருக்காது.
இது போன்ற நோக்கங்களில் பள்ளிக்கூடங்கள் ப வடிவ வகுப்பறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கவனிச்சிதறல்களை குறைக்கவும், கடைசி இருக்கை மாணவர் என்ற முறையை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நடைமுறையினால் அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
ப வடிவ வகுப்பறைகள் அமைக்க மாணவர்களுக்கு கழுத்து வலி மற்றும் முதுகு வலி ஏற்படும் நிலை உள்ளது என்றும், இந்த உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, ப வடிவ இருக்கைகள் அமைப்பது ஒரு புறம் இருக்கட்டும், முதலில் வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்யுங்கள் என்றும் விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சியில் இருந்து பள்ளி கல்வித்துறை ப வடிவ வகுப்பறை உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இதுபோன்ற இது எந்த ஒரு தகவலையும் பள்ளி கல்வித்துறை வெளியிடவில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.