சரோஜா தேவியின் பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை: பிறந்த தேதி: ஜனவரி 7, 1938
பிறந்த இடம்: பெங்களூரு, கன்னட மாநிலம்.
தந்தை: பைரப்பா (போலீஸ் அதிகாரி)
தாய்: ருத்ரம்மா.
மொழிகள்: கன்னடம், தமிழ்,தெலுங்கு,ஹிந்தி.
சிறுவயதில் நடனத்தில் ஆர்வம் காட்டிய இவர், பாட்டும் பாடலும், நடனமும் கற்றுத் தந்தையின் ஊக்கத்துடன் மேடைகளில் பங்கேற்றார். 1955ல் மஹாகவி காளிதாசா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.1958ல் எம்ஜிஆர் உடன் நடித்த நாடோடி மன்னன் திரைப்படம் இவரை தமிழில் பிரபலமாக்கியது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர் உடன் 26 திரைப்படங்கள், சிவாஜி கணேசன் உடன் 22 திரைப்படங்கள், ஜெமினி கணேசன், ராஜ்குமார், என்.டி.ராமா ராவ், ஹிந்தி நடிகர்கள் உடன் இணைந்து நடித்துள்ளார். 161 தொடர்ச்சியான திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் ஒரே நடிகை என்ற சாதனை படைத்துள்ளார்.தமிழில் நாடோடி மன்னன், பாக்யலட்சுமி, கல்யாண பரிசு, அண்ணா,கன்னடத்தில் கித்தூர் சென்னம்மா, அமரசில்பி ஜக்கணாசாரி.ஹிந்தியில் பைம், ஸஸுரால், ப்யார் கியா தோ டர்னா க்யா ஆகிய படங்களில் நடித்துள்ளார். 1967ல் ஸ்ரீஹர்ஷா என்ற பொறியாளரை மணந்தார். 1986ல் அவருடைய கணவர் இறந்தபின், திரையுலகில் இருந்து ஓய்வு பெற்றார். தாய்மை பெறாத நிலையில், தனது உறவினர் புவனேஸ்வரியை தத்தெடுத்துள்ளார்.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்:
பத்மஶ்ரீ – 1969
பத்ம பூஷண் – 1992
கலைமாமணி விருது, நடிகர் டாக்டர் ராஜ்குமார் விருது, என்டிஆர் தேசிய விருது, மற்றும் பல மாநில விருதுகள் பெங்களூர் பல்கலைக்கழகத்திலிருந்து கௌரவ டாக்டரேட். 53வது தேசிய திரைப்பட விருது குழுவிற்கு தலைமை வகித்தவர் “அபிநய சரஸ்வதி” என்றும், “கன்னடத்து பைங்கிளி” என்றும் அன்பாக அழைக்கப்பட்டவர். 2010ம் ஆண்டு “பத்மபூஷண் பி.சரோஜா தேவி விருது” என்ற பெயரில் ஒரு ஆண்டுப் பரிசு நிறுவப்பட்டது. 2019-ல் நடசார்வபௌமா என்ற கன்னட படத்தில் சிறிய தோற்றம் இவரது கடைசி திரைநிகழ்வு.
மரணம்: ஜூலை 14, 2025 பெங்களூரு
வயது: 87, வயதானதால் உடல் நலக்குறைவால் காலமானார். திரையுலகினரும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் தனது சோகத்தினை தெரிவித்தனர். பி.சரோஜா தேவி ஒரு பன்னாட்டு நடிகை, பாரம்பரிய பெண் சூப்பர்ஸ்டார், நடிப்பு, நலம், நேர்மை, அழகு, பண்பு என அனைத்தையும் இணைத்தவர். அவரது சாதனைகள் இந்திய திரையுலகில் யாராலும் மறக்க முடியாதவை. அவரது வரலாறு என்பது தமிழ்த் திரையுலகத்தின் பொற்காலத்தை சாட்சி சொல்லும் பக்கங்கள். அவரைத் தொடர்ந்து பாராட்டும் காலம் நிலைக்கும்.