தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு!! மனைவியின் மீது கொண்ட காதலை வெளிப்படுத்திய விஜய்!!

மதுரை ஆகஸ்ட் 25 நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தனது இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மாநாடு தொடர்பான நிதான திட்டங்கள் நடப்பில் இருந்தபோதும், திடீரென வெளியான தேதி அறிவிப்பு, தொண்டர்களுக்கு இனிப்பு செய்தியாக இருக்கிறது. மேலும், மாநாட்டு தேதி விஜயின் திருமண நாளுடன் இணைந்திருப்பதே இதன் சிறப்பு. 1999 ஆகஸ்ட் 25 அன்று தனது ரசிகையான சங்கீதாவை விஜய் திருமணம் செய்துகொண்டார். இன்று விஜய்-சங்கீதா தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் சஞ்சய் மற்றும் ஷாலினி. சஞ்சய் தற்போது இயக்குநராக களத்தில் இறங்கியுள்ளார். ஷாலினி உயர்கல்வியில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் விஜய்-சங்கீதா தம்பதி பாசமற்ற நிலை குறித்து வதந்திகள் பரவிய நிலையில், திருமண நாளில் திரண்ட மாநாட்டின் மூலம் விஜய் குடும்ப வாழ்வில் சந்தேகம் இல்லை என்பதையும் மறைமுகமாக நிரூபிக்கிறார் என்ற கருத்தும் தொண்டர்கள் இடையே தெரிந்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம், ஒரே ஆண்டில் மாநில அளவிலான இரண்டு மாநாடுகளை நடத்தும் நிலைக்கே வந்துள்ளது. முதல் மாநில மாநாடு 2024 அக்டோபரில் விழுப்புரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆரம்பத்தில் அறிக்கை அரசியல் என விமர்சிக்கப்பட்ட விஜய், பரந்தூர் விமான நிலைய போராட்டம், சிவகங்கை காவல் மரணம், சென்னையில் காவல் நிலைய மரணம் போன்ற சமாசாரங்களில் நேரடி பங்கேற்பு மூலம் தீவிர அரசியலுக்கு மாறினார். 2026 சட்டமன்ற தேர்தல் இலக்குடன், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் விஜய். இன்று காலை மாநாட்டுக்கான பூமி பூஜை நடந்தது. அதில் திரண்ட கூட்டம், மினி மாநாடு போலவே இருந்தது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

 

 

 

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram