Cricket : இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணியுடன் மோத உள்ளது ஆனால் இரண்டு முக்கிய வீரர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளாதது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி பங்களாதேஷை எதிர்கொண்டது. இரண்டாவது போட்டி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இது போட்டிக்கு எதுவும் அபாரமான வெற்றியை பதிவு செய்து அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியதால் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளும் முதலாவதாக அறிவித்துச் செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறி உள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இது ஒரு புறம் இருக்க இந்திய ரசிகர்களையும் சோகத்தில் தள்ளும் ஒரு விஷயம் நடந்துள்ளது.
இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணியுடன் ஞாயிற்றுக்கிழமை மோத உள்ளது. தற்போது இந்திய வீரர்கள் இதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் போட்டியின் போது கேப்டன் ரோஹித் சர்மா தசைப்பிடிப்பு காரணமாக சிறிது நேரம் மைதானத்தை விட்டு வெளியேறினார். அப்போது சுப்மின்கில் கேப்டன் பொறுப்பை ஏற்று பில்டிங் செட் செய்தார். இந்நிலையில் இந்திய வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வரும் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியை பார்க்கும் ஒரு நபராக மட்டுமே இருக்கிறார்.
அவர் எந்த ஒரு பேட்டிங் ஃபீலிடிங் எந்த பயிற்சியை மேற்கொள்ளாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அவர் தசை பிடிப்பு காரணமாக அடுத்து நடக்கவிருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கலந்து கொள்வாரா? என்பது சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது இது இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





