Cricket : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வலைப்பயிற்சியில் ஈடுபடாத நிலையில் தற்போது துணை கேப்டனும் வலைப் பயிற்சி செய்யவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடந்து கொண்டிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025 ஆண்டிற்கான தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. இந்திய அணி பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் என இரு போட்டிகளின் விளையாடி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. தொடர் வெற்றிகளை குவித்து அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில் 2 ம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
இந்தப் போட்டிக்கான தீவிர வலை பயிற்சியை மேற்கொண்டு வருகிறது இந்திய அணி. இதன் வலை பயிற்சியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பயிற்சி ஏதும் எடுக்காமல் அமர்ந்து பார்க்கும் ஒரு ஆளாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி நிலையில், தற்போது இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் பயிற்சி எடுப்பதற்கு மைதானத்திற்கு வரவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விளையாடிய இரண்டு போட்டிகள் சுப்மென்ட்கள் சிறப்பான பேட்டிங் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் ஒரு முக்கிய நம்பிக்கையாக சுமங்கின் கடைசி வரை களத்தில் இருந்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் இவர் போட்டிகளில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் வலை பயிற்சிக்கு வராதது இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.





