ரூ.9 கோடி இழப்பீடு கோரி நடிகர் ரவி மோகன் தாக்கல்!! படபிடிப்பு துவங்கவே இல்லை!!

Actor Ravi Mohan files a lawsuit seeking Rs. 9 crore in compensation

சென்னை: திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து  செய்த வழக்கில், தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு, தயாரிப்பு நிறுவனம் ரவி மோகன் மீது தொடர்ந்த வழக்கோடு சேர்த்து ஜூலை 23 அன்று மீண்டும் விசாரணைக்கு வரும்.
:
கடந்த 2024 ஆம் ஆண்டு பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனம், நடிகர் ரவி மோகனை இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்தது. இதற்காக ரவி மோகன் ரூ.6 கோடி முன்பணமாகப் பெற்றுள்ளார். ஆனால், ஒப்பந்தப்படி படப்பிடிப்பு குறித்த காலத்தில் துவங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

படப்பிடிப்பைத் துவங்காததால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், ரவி மோகன் முன்பணமாகப் பெற்ற ரூ.6 கோடியைத் திரும்பத் தர வேண்டும் என்றும் கோரி பாபி டச் கோல்ட் யுனிவர்சல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மேலும், அவர் அந்த பணத்தை தனது சொந்த தயாரிப்பு அல்லது சொந்த செலவுகளுக்குப் பயன்படுத்த வாய்ப்புள்ளதால், ‘ப்ரோ கோட்’ என்ற படத்தை தயாரிக்கவும், வேறு நிறுவனத்தின் தயாரிப்பிலும் நடிக்கவும் ரவி மோகனுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தயாரிப்பு நிறுவனம் கோரியிருந்தது.

இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், அவர் கூறியதாவது:

கால்ஷீட் ஒதுக்கியும் படப்பிடிப்பு இல்லை: 2025 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 80 நாட்கள் படப்பிடிப்புக்காக கால்ஷீட் ஒதுக்கிய போதிலும், தயாரிப்பு நிறுவனம் இதுவரை படப்பிடிப்பைத் துவங்கவில்லை. மற்ற பட வாய்ப்புகள் இழப்பு: கால்ஷீட் ஒதுக்கியதால், வேறு படங்களில் நடிக்க முடியாமல் போனது.

ஒப்பந்த மீறல்: மார்ச் முதல் ஜூன் மாதம் வரை நாட்கள் ஒதுக்கிய பின்னரும் படப்பிடிப்பு நடத்தாததால் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. இதனால் தான் படத்திலிருந்து விலக வேண்டியதாயிற்று. முன்பணம் திருப்பித் தரக் கோரிக்கை: இது குறித்து தயாரிப்பாளருக்குத் தகவல் தெரிவித்தபோது, முன்பணமாகப் பெற்ற ரூ.6 கோடியைத் திருப்பித் தர வேண்டும் என தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ரவி மோகன் குறிப்பிட்டுள்ளார்.

இழப்பீடு கோரிக்கை: ஒப்பந்தப்படி குறித்த காலத்தில் படப்பிடிப்பை துவங்காத காரணத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரூ.9 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று ரவி மோகன் தனது மனுவில் கோரியுள்ளார்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram